×

வடசேரியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு

தஞ்சை, நவ. 24: தஞ்சை அருகே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சை அருகே வடசேரி ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார் தலைமையில் மக்கள் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தஞ்சை அருகே வடசேரியில் பல ஆண்டுகளாக 175க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லை. கடந்த ஆண்டு கஜா புயலின்போது சேதமடைந்த எங்கள் குடிசைக்கு மாறாக வீடு கட்ட ஒதுக்கீடு கிடைத்தும் சொந்த இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். எனவே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags :
× RELATED இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் கலெக்டரிடம் மனு