×

17ம் ஆண்டு நினைவுநாள் முரசொலிமாறன் படத்திற்கு திமுகவினர் மரியாதை

புதுக்கோட்டை, நவ.24: புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 17வது  ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது உருவபடத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர் முரசொலிமாறன் 17வது ஆண்டு நினைவுநாளான நேற்று அவரது உருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சேர்மன் போஸ், வக்கீல் அணி அமைப்பாளர் பூங்குடி சிவா, நகர செயலாளர் அண்ணாத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரும் தூவி திமுகவினர் மரியாதை செய்தனர். இதில் சந்திரசேகர், தமிழ் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Murasolimaran ,
× RELATED ஞானதேசிகன் மறைவுக்கு சர்வ கட்சியினர் அஞ்சலி