×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, நவ.24: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 11,048 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்துள்ளது. புதிய உயிரிழப்புகள் இல்லாததால், மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 154 ஆக தொடர்கிறது. இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 114 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,Pudukkottai district ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,849 பேருக்கு...