×

அதிமுக - பாஜக கூட்டணியால் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு எளிது

அரியலூர்,நவ.24: அதிமுக பாஜக கூட்டணியால் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் தெரிவித்தார். அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுக்கான தேர்தல் பிரச்சார குறித்த ஆலோசனை கூட்டம் அரியலூர் தனியார் மகாலில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் சட்டப்பேரவை திமுக மண்டல பொறுப்பாளருமான சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக - பாஜக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என அறிவித்துள்ளது, திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது. திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும். தேர்தல் பிரசாரம் போல் அரசு விழாக்களை தமிழக முதல்வர் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றார். ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டதிட்ட திருத்தகுழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் கணேசன், ஒன்றிய பொறுப்பாளர்கள் முருகன், நகர செயலாளர்கள் முருகேசன், கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,AIADMK ,BJP ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...