×

திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம்

காரைக்கால், நவ.24: திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு  தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வந்தார். தொடர்ந்து, கோயிலில் உள்ள விநாயகர், முருகர், தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்துவிட்டு, சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது: தமிழகத்தில் மக்கள் ஆதரவு எப்போதும் அதிமுகவிற்கு உண்டு. தொண்டர்கள் பலம் பலமாகவே உள்ளது.  பாஜக- அதி முக கூட்டணி குறித்து தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெளிவுப்படுத்திவிட்டனர். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சித்தான் என்றார்.

Tags : Rajendrapalaji Swamy ,darshan ,Thirunallar Sanibagavan Temple ,
× RELATED மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை...