×

17ம் ஆண்டு நினைவு நாள் முரசொலி மாறன் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கரூர், நவ. 24: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 17ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் திருவுருவ படத்துக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், நகர பொறுப்பாளர்கள் கனகராஜ், தாரணி சரவணன், ராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குடியரசு, முன்னாள் கவுன்சிலர் ரவிக்குமார் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Murasoli Maran ,
× RELATED ஞானதேசிகன் மறைவுக்கு சர்வ கட்சியினர் அஞ்சலி