×

சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

கரூர், நவ. 24: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே தனது 8 வயது மகளை பாலியல் பலாத்கார முயற்சி செய்ததாக தாய் அளித்த புகாரின் பேரில், இரண்டு பேர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஒரு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தனது 8 வயது மகளை இதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர், பாலியல் பலாத்கார முயற்சி செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இரண்டு வாலிபர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்