×

காந்திகிராமம் அருகே கஞ்சா வியாபாரிகள் 2 பேர் மீது வழக்கு

கரூர், நவ. 24: கரூர் காந்திகிராமம் அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் காந்திகிராமம் பிரதான மளிகை கடையின் எதிரே உள்ள மைதான பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் விற்பனை செய்யும் நோக்கில் மறைத்து வைத்திருந்த 900கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதே பகுதியை சேர்ந்த பாலாஜி, சூர்யா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : cannabis dealers ,Gandhigram ,
× RELATED நடவடிக்கை எடுக்க கோரிக்கை...