×

அகில இந்திய வேலைநிறுத்தம் குறித்து பிரசாரம் தொழிற்சங்க கூட்டமைப்பு தெருமுனை கூட்டம்

கரூர், நவ. 24: கோரிக்கை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் காந்திகிராமம் பகுதியில் நடைபெற்ற இந்த தெரு முனைக் கூட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்ட செயலாளர் வடிவேலன் தலைமை வகித்தார். இதில் எல்பிஎப் மாவட்ட தலைவர் அண்ணாவேலு, சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகேசன், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 26ம் தேதி அன்று அகில இந்திய வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து விளக்கும் வகையில் இந்த தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

Tags : Campaign Trade Union Confederation Street Meeting ,
× RELATED இன்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல்