×

பட்டாசு தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வேண்டும் சிஐடியு வலியுறுத்தல்

சிவகாசி, நவ.24: கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பட்டாசு தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரண நிதி வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர் சங்கம் சார்பில் பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், நலன் காக்கவும் சிவகாசியில் பேரவை கூட்டம் நடந்தது. நகர தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா, மாவட்ட தலைவர் பாண்டியன், சுரேஷ்குமார், அய்யாசாமி, முருகன், மகாலட்சுமி பேசினர்.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கால் வேலையிழந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு ரூ.7500 நிவாரண நிதி வழங்க வேண்டும், பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சங்க நகர தலைவராக ஜோதிமணி, செயலாளராக ஜோதி, பொருளாளராக ஜெபஜோதி  தேர்வு செய்யப்பட்டனர்.  மனித வள மேம்பாட்டு நிறுவனம்  சார்பில் 200 பட்டாசு தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது.

Tags : CITU ,firecracker workers ,
× RELATED பொங்கல் பரிசு வழங்கக்கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்