×

கால்பந்தில் பனைக்குளம் அணி முதலிடம்

தொண்டி, நவ.24:  தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல் நிலைப்பள்ளியில் தொண்டி ஸ்போட்ஸ் கிளப் மற்றும் தொண்டி புட்பால் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது. போட்டியில் ராமநாதபுரம், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்த 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டது. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசு 13 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை பனைக்குளம் அணியினரும், இரண்டாம் பரிசை தொண்டி புட்பால் கிளப் அணியினரும், மூன்றாம் பரிசை மதுரை அணியினரும், நான்காம் பரிசை தேரிருள்வேலி அணியும் பெற்றது. சிறந்த ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த கோல் கீப்பருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி அப்துல் ரஹ்மான், அபுபக்கர், சாதிக் காஜியார், சாதிக் பாட்சா, ஜிப்ரி சுலைமான், இனாமல் ஹசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆதில், ரஹீம், செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : Panaikulam ,team ,
× RELATED தனியார் நிறுவனத்தில் ₹40 ஆயிரம் திருட்டு