×

நிவர் புயலின் போது விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?

மேலூர், நவ. 24: வருகின்ற நவ. 24,25,26 தேதிகளில் நிவர் புயலின் காரணமாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அனைத்து விவசாயிகளும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேளண்துறை அறிவுறுத்தி உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள நெல் வயல்களில் நீரைவடிகால் வசதி செய்து வெளியேற்ற வேண்டும். தங்கள்பயிர்களை பொதுசேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உரியகாப்பீடு செய்து கொள்ள வேண்டும். தென்னை விவசாயிகள் முதிர்ச்சி அடைந்தகாய்களை உடனடியாகஅறுவடை செய்தி வேண்டும். அதிகஎடையுள்ள ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். வாழை, பப்பாளி போன்றவை காற்றினால் அதிக பாதிப்பு உள்ளாகும் என்பதால், சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் கம்புகளை கொண்டு ஊன்றுகோல் அமைக்க வேண்டும். தொடர்ந்து மழைபெய்யும் நாட்களில் விவசாயிகள் தங்கள் வேளாண் விளை பொருட்களை அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் சேமிக்கலாம் எனஎன வேளாண் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : hurricane ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக...