×

ஊட்டி நகர தி.மு.க., சார்பில் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு

ஊட்டி,நவ.24: முரசொலி மாறனின் 17வது நினைவு தின நிகழ்ச்சி ஊட்டி நகர தி.மு.க., சார்பில் நடந்தது. ஊட்டியில் உள்ள நகர தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்து, முரசொலி மாறன் உருவபடத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முரசொலி மாறன் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முரசொலி மாறன் அரசியல் வாழ்க்கை மற்றும் தி.மு.க., வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டது குறித்து பலரும் பேசினர். நிகழ்ச்சியில், மாவட்ட மற்றும் நகர அணிகளின் நிர்வாகிகள் கார்டன் கிருஷ்ணன், காந்தல் பாபு, ஜுபீர், காந்தல் சம்பத், நிக்கோலஸ், ஸ்டேன்லி, கீதா, உமேஷ், கண்ணன், தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, அசரப்அலி, வெங்கடேஷ், ஜோகி, பெரியசாமி, செல்வராஜ், ராமு, ராஜ்குமார், பாலமுரகன், ரங்கநாதன், மகளிர் அணியை சேர்ந்த நாகமணி, டெய்சி லலிதா மற்றும் கீதா, கண்ணகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட திமுக., சார்பில் அனுசரிப்பு : முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 17வது நினைவு தினம் மாவட்ட தி.மு.க., சார்பில் ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவபடத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எல்கில் ரவி, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் காந்தல் ரவி, மாவட்ட பிரதிநிதி ராஜா, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பாபு, நகர துணை செயலாளர் ரீட்டாமேரி, பொருளார் அணில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நிர்வாகிகள் அனைவரும் முரசொலி மாறன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் வாணீஷ்வரி, ஜெயராமன், மார்க்கெட் ரவி, ரகு, சசிகுமார், சந்திரசேகர், ஊராட்சி செயலாளர்கள் குண்டன், பெள்ளன், பர்னபாஸ், வெங்கடேஷ், ஆட்டோ பாபு உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் தி.மு.க., சார்பில் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Tags : Murasoli Maran Memorial Day ,Ooty City DMK ,
× RELATED ஊட்டி நகர திமுக., சார்பில் சமத்துவ பொங்கல் விழா