×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோவை, நவ.24:  பெரியநாயக்கன்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஜோதிபுரத்தில் உள்ள கோயில் அருகே 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிக்க முயன்றனர். அதில் 2 பேர் தப்பி ஓடினர். ஒருவர் போலீசில் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. விசாரணையில் ஜோதிபுரம் பட்டக்காரர் தெருவை சேர்ந்த மாரிமுத்து (26) என தெரியவந்தது. இவரிடம் 1.2 கிலோ  கஞ்சா இருந்தது. இவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது