ஈரோடு மாவட்டத்தில் 2.55 லட்சம் கொரோனா பரிசோதனை

ஈரோடு,நவ.24: ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா  வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு  மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் சுமார் 12 ஆயிரம் பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 138 பேர் பலியாகி உள்ளனர். ஈரோடு அரசு மருத்துவமனை, காந்திஜி ரோட்டில் உள்ள மகப்பேறு  மருத்துவமனை, கருங்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், சூளை ஆரம்ப சுகாதார  நிலையம், சூரம்பட்டி வலசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரியசேமூர் ஆரம்ப  சுகாதார நிலையங்களில் கொரோனா நிரந்தர பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு  தினமும் இந்த மையங்களில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை  செய்யப்படுகிறது.

   இது தவிர ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை, வட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில்  பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. மாவட்டத்தில்  இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு  பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories:

>