வாக்காளர் சிறப்பு முகாம் 2,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன

ஈரோடு,  நவ. 24: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக 2  நாட்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2,400 விண்ணப்பங்கள்  பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 16ம்  தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் உள்ள  8 சட்டமன்ற தொகுதியில் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர்.  இதனிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம்  தொடர்பாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாம் மாவட்டம்  முழுவதும் நடந்தது. மொத்தம் 2,215 வாக்குசாவடிகளில் நடைபெற்ற இந்த  சிறப்பு முகாம்களில் 2,100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  இது தவிர ஆன்லைன்  மூலமாக 300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதை சேர்த்து மொத்தம் இதுவரை 2,400  விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பொதுமக்கள் www.elections.tn.gov.in என்ற இணையதளம்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>