×

கோர்ட்டில் ஆஜராகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையன் கைது

திண்டிவனம், நவ. 24: திண்டிவனத்தை சேர்ந்த ஜானி பாஷா(58), என்பவர் கடந்த 2004ல் 2 லட்சத்து 5ஆயிரம் ரூபாயை செஞ்சி சாலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா, புதுப்பாளையம் முத்தூர் அடுத்த வீரமாத்தி தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில் என்கின்ற சின்னசாமி(47), மேம்பாலம் அருகே ஜானி பாஷாவை வழிமறித்து பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து ஜானி பாஷா திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் வெளிவந்த செந்தில் நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டும், 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் மாவட்டத்தில் இருந்த செந்திலை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர் மீது தமிழகம் முழுவதிலும் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.

Tags : robber ,court ,
× RELATED முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை...