×

ஏரி, குளம் பகுதியில் குழந்தைகள் குளிக்க அனுமதிக்கக்கூடாது எஸ்பி வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி, நவ. 24:    கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகள் மழைநீர் சேகரிப்பதற்காக ஆழப்படுத்தப்பட்டு தூர் வாரப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையில் ஆழப்படுத்தப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் அதிகளவில் நீர் தேங்கியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஏரி மற்றும் குளங்களில் குளிக்க அனுமதிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.     மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றிவிட வேண்டும். டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். மேலும் சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தகூடாது. மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் அருகில் எதுவும் பயன்படுத்த கூடாது.   
 
மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்ல கூடாது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும். ஸ்டே ஒயர்கள் அருகே செல்ல வேண்டாம். நாளை (25ம் தேதி) புயல் காரணமாக ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தகவல் அறிய பொதுமக்கள் 7598172009, 7598202770 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : SP ,children ,pool area ,lake ,
× RELATED புகையில்லாத போகி கொண்டாட ஆணையாளர் வேண்டுகோள்