×

வி.கே.புரம் நகராட்சியில் கழிப்பறை தினம்

வி.கே.புரம்,நவ.24: வி.கே.புரம் நகராட்சி சார்பாக உலக கழிப்பறை தினம் நடந்தது. கோட்டைவிளைபட்டியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர்            காஞ்சனா தலைமை வகித்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் முன்னிலை      வகித்து, கழிப்பறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். கழிப்பறை கட்டுவதற்கு அரசு வழங்கும் மானியத்தையும் பொதுமக்களிடம் விளக்கினார். இதில் தூய்மை இந்திய மேற்பார்வையாளர் ஈஸ்வரன், சுகாதார மேஸ்திரி மில்லர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Toilet Day ,VKpuram Municipality ,
× RELATED 400 கோடி மக்களுக்கு ‘அதுக்கு’ வழி இல்லை: இன்று நவ.19 சர்வதேச கழிப்பறை தினம்