நெல்லை மாவட்டத்தில் 4 மாதங்களில் 108 பேர் குண்டர் சட்டத்தில் கைது எஸ்பி மணிவண்ணன் நடவடிக்கை

நெல்லை, நவ. 24: நெல்லை மாவட்டத்தில் எஸ்பி மணிவண்ணன் அதிரடி உத்தரவின் பேரில் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, கூலிப்படையினர் மற்றும் ரவுடிகள் 108 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் கடந்த ஜூலை 15ம்தேதி பொறுப்பேற்றார். இதையடுத்து மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியவர்கள், கூலிப்படையினர், ரவுடிகளை கண்காணித்து கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் மற்றும் உளவு துறையினரை முடுக்கிவிட்டார். அத்துடன் அவர்களின் பட்டியல்களும் தயாரிக்கப்பட்டது. இதனால் கூலிப்படையினர், ரவுடிகள் வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நெல்லை மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் பொறுப்பற்ற கடந்த 4 மாதங்களிலேயே மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 108 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 3 எஸ்ஐக்கள் உள்ளிட்ட 9 போலீசாரை எஸ்பி மணிவண்ணன் சஸ்பெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: