×

நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி, நவ. 24: கோவில்பட்டி  நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சமுதாய  விழிப்புணர்வு மையம் சார்பில் கவுணியன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி  மாணவர்களுக்கு மின்சார பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி இணையவழியாக நடந்தது.  கல்லூரி துணை பேராசிரியர் குமார்  வரவேற்றதோடு சமுதாய விழிப்புணர்வு மையத்தின் முக்கியத்துவம் மற்றும் மின்சார  சிக்கனம், சேமிப்பு முறைகளை விளக்கினார். மேலும் காற்று,  நிலக்கரி, தண்ணீர் போன்றவற்றை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறைகளையும்,  அணுமின் நிலையங்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் விரிவாக  கூறினார்.
 
 இணைப் பேராசிரியர் ரவீந்திரன், மின் அதிர்ச்சி ஏற்பட்டால் இருதயத்திற்கு அளிக்க வேண்டிய புத்துயிர் சிகிச்சை முறை, பெரிய அளவிலான  மின்சாரம் உடலில் பாய்ந்தால் இதயம் அதிர்ச்சிக்குள்ளாவது  மட்டுமின்றி  தசைகளில் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தார். தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவன  காணொலிகாட்சி மூலமாக விளக்கப்பட்டது.  ஏற்பாடுகளை கல்லூரி  இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாஸ முருகவேல், மின்னியல்  மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் முனைவர் வில்ஜூஸ் இருதயராஜன்   வழிகாட்டுதலின்படி உதவிப்பேராசிரியர் குமார் செய்திருந்தார்.

Tags : National College of Engineering ,
× RELATED கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி...