×

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் காவலர் போட்டித் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி கையேடு வழங்கல்

தூத்துக்குடி, நவ.24:  தூத்துக்குடி காமராஜ் கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 60 ஆண்கள், பெண்கள் இருபிரிவுகளாக பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. இதையடுத்து காவலர் தேர்வுக்கான பயிற்சி பெற்று வருபவர்களுக்கு இலவச பயிற்சி கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தூத்துக்குடி சிவில் சப்ளை பறக்கும்படை தாசில்தார் ஞானராஜ், இலவச பயிற்சி கையேடுகளை வழங்கினார். இதில், கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் சரவணன், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் தேவராஜ், பேராசிரியை பொன்னுத்தாய் மற்றும் பாபுகுமார் பங்கேற்றனர்.

Tags : Police Competitors ,Thoothukudi ,Kamaraj College ,
× RELATED தேரிகுடியிருப்பு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்