உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினர் மறியல்

தூத்துக்குடி, நவ. 23: திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களையும் போலீசார் தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி என்ற தலைப்பில் திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.  இதையொட்டி நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது அனுமதியை மீறி கூட்டம் கூடியதாக கூறி  உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு போலீசார்  கைது செய்ததை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் திமுகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களையும் போலீசார் தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர்.

திமுக இளைஞர் அணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து  திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பாக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் திரண்ட திமுகவினர் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஒன்றியச் செயலாளர் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளர் வாள் சுடலை, மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞர் அணி ராமஜெயம், ராஜபாண்டி, வக்கீல் அணி ஜெபராஜ், ராஜமோகன், தகவல்தொழில்நுட்பஅணி பேரின்பராஜ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சாத்ராக், அனைக்ஸ், கிருபாகரன், சுதாகர், பரமன்குறிச்சி இளங்கோ, முன்னாள் கவுன்சிலர்கள் மணல்மேடு சுரேஷ், கோமதிநாயகம், மகளிர் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் வேலம்மாள், மாணவர் அணி ஒன்றிய அமைப்பாளர் தமிழழகன், நகர துணைச்செயலாளர்கள் ஆனந்த ராமச்சந்திரன், தனசேகரன், தகவல் தொழில்நுட்ப அணி நம்பிராஜன், வார்டு பொறுப்பாளர் மலர் செல்வன் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட 96 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் அணி மதியழகன், ஆனந்த் கேபிரியேல்ராஜ், பொறியாளர் அணி அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வடபாகம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர். இதே போல் தாளமுத்துநகர் டேவிஸ்புரம் பகுதியில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜோதிராஜா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்ளிட்ட 86 பேரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம்:  இடைச்சிவிளை  விலக்கு பஸ் நிறுத்தம் அருகே பிரதான சாலையில் அரசூர் ஊராட்சி தலைவரும், திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளருமான தினேஷ்ராஜசிங் தலைமையில் திமுகவினர் சாலை  மறியலில் ஈடுபட்டனர். இதில் பூச்சிகாடு செயலாளர் நிவாசன், பூச்சிகாடு  கண்ணன், தச்சன்விளை சண்முகசுந்தரம், திலகர், முருகேசன், சுடலைமுத்து,  அந்தோனி அருள்ராஜன், கடகுளம்திலகர், கலியன்விளை மணி, இடைச்சிவிளை  ஜோயல், கந்தன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட  120 பேரை தட்டார்மடம் எஸ்.ஐ முத்துசாமி மற்றும் போலீசார் கைது செய்து  காந்திநகர் தனியார் திருமண  மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.

விளாத்திகுளம்: திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பாக திரண்ட திமுகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒன்றியச் செயலாளர்கள் விளாத்திகுளம் மேற்கு வசந்தம் ஜெயக்குமார், கிழக்கு சின்னமாரிமுத்து, புதூர் கிழக்கு செல்வராஜ், மேற்கு மும்மூர்த்தி, நகரச் செயலாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் அன்புராஜன்,முத்துலட்சுமி ஐயன்ராஜ், ராஜாகண்ணு, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், டேவிட்ரவிராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.

உடன்குடி: உடன்குடி ஒன்றிய, நகர திமுக சார்பில் உடன்குடி மெயின் பஜாரில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் தலைமை வகித்தார். இதில் நகரச் செயலாளர் ஜான்பாஸ்கர் முன்னிலையில் வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிராஜா, சிறுபான்மைபிரிவு மாவட்ட துணைஅமைப்பாளர் சிராசுதீன், நகர அவைத்தலைவர் திரவியம், நகரச் செயலாளர் தங்கம், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சலீம், அன்வர் சலீம், இளைஞர் அணி நகரச் செயலாளர் அஜய், வார்டு செயலாளர் கணேசன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு, யூனியன் கவுன்சிலர் லேபோரின், இளைஞர் அணி  ஒன்றிய துணைஅமைப்பாளர் மனோஜ், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் பங்ேகற்றனர்.

 இதையடுத்து விரைந்து வந்த குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்து உடன்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின்னர் விடுவித்தனர்.

செய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூரில் கருங்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கால்வாய் இசக்கி பாண்டியன் தலைமையில் வடக்கு ஒன்றியச் செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ் காந்தி முன்னிலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் அவைத்தலைவர் பட்டன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் கலீலுர் ரஹ்மான், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், ஒன்றிய துணைச்செயலாளர் பக்கபட்டி சுரேஷ், வடக்கு மாவட்டப் பிரதிநிதி கண்ணன்,  தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் மதுபாலா சுடலைமணி, ஊராட்சி தலைவர் கொம்பன், ஒன்றிய துணைச்செயலாளர் முருகேசன், வடக்கு மாவட்டப் பிரதிநிதி மாரிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர் வீரபாபு,  தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் சிவஞானம், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் கொம்பையா, மாணவர் அணி பொறுப்பாளர் கந்தகுமார், கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் வேல்முருகன், கருங்குளம் கிளைச் செயலாளர் சாதிக், காஜா முகைதீன், முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு நகர திமுக செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். இதில் ஒன்றியச் செயலாளர் முருகேசன், விவசாய அணி அமைப்பாளர் ராமர், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர துணைச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதிகள் புஷ்பராஜ், ரவீந்திரன், மாரிச்சாமி, இளைஞர் அணி அமைப்பாளர் மகேந்திரன், மாணவர் அணி துணை அமைப்பாளர் மயில் கர்ணன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், ஈகா வேலுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: