×

உடன்குடியில் நீச்சல்குளம், பூங்கா அமைக்கும் பணி கனிமொழி எம்பி ஆய்வு

உடன்குடி, நவ. 23:   உடன்குடியில் சிறுவர்களின் விளையாட்டு உலகம், நீச்சல்குளம், பூங்கா, பொழுதுபோக்கு மையம் அமைக்கும் பணியை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன்குடி யூனியன், செட்டியாபத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட அய்யாநகரிலிருந்து வாகவிளை செல்லும் மெயின் ரோட்டில் ரூ2.90 லட்சம் மதிப்பீட்டில் மியாவாக்கி என்ற திட்டத்தில் குறுகிய இடத்தில் குறுகிய நாட்களில் காடுகள் வளர்த்தல் மற்றும் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல், நீச்சல்குளம் பூங்கா ஆகியவை இணைந்து சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நடந்து முடிந்தவுடன் இதன் மூலம் செட்டியாபத்து பஞ்சாயத்துக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும். இந்த பணியை பார்வையிட கனிமொழி எம்பி, தெற்குமாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பார்வையிட்டனர்.

செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணைத்தலைவர் கணேசன் வரவேற்றனர். தொடர்ந்து காடுவளர்த்தல், பூங்காக்கள் அமையும் இடங்களை சுற்றிப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த பணிக்கு தேவையான நிதிகளை தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தருவதாக உறுதியளித்தனர். தொடர்ந்து கனிமொழி எம்பி மரக்கன்றுகள் நட்டார். இதில் ஒன்றியச் செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங், துணை சேர்மன் மீரா சிராஜுதீன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு, வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, பரமன்குறிச்சி இளங்கோ, சிறுபான்மை நல உரிமைப்பிரிவு துணைஅமைப்பாளர் சிராஜூதீன், உடன்குடி நகரச் செயலாளர் ஜான்பாஸ்கர்,  பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சலீம், ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் குணசீலன், இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் பாய்ஸ், இளைஞர் அணி நகரச் செயலாளர் அஜய், ஆசிரியர் சிவலூர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Udankudi ,swimming pool ,Kanimozhi MP ,
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...