வேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 11 ஆயிரம் பேர் விண்ணப்பம்

வேலூர், நவ.23: வேலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய சிறப்பு முகாம் இம்மாதம் 21ம், 22ம் மற்றும் டிசம்பர் 12ம் மற்றும் 13ம் ேததிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 616 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வாக்குசாவடி மையங்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில் பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் மொத்தம் 11 ஆயிரம் 740 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், www.nvsp.in, https://voterportal.eci.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>