வேலூரில் பரபரப்பு உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 50 பேர் கைது

வேலூர், நவ.23: திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருக்குவளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து 3வது நாளான நேற்று நாகை மாவட்டம் குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து போலீசார் உதயநிதியை கைது செய்தனர். இந்த தகவலை அறிந்த வேலூர் மாவட்ட திமுக இளைஞரணியினர் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜ மார்த்தாண்டன் தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினர் 50 பேரை கைது செய்து வேலூர் கொணவட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் கிரீன் சர்க்கிள் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>