வீட்டின் கதவு உடைத்து 10 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

குடியாத்தம், நவ.23: குடியாத்தத்தில் இந்து முன்னணி நிர்வாகி நிர்வாகி வீட்டில் 10 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

குடியாத்தம் பிச்சனூர்பேட்டையை ேசர்ந்தவர் மகேஷ், இந்து முன்னணி மாவட்ட செயலாளர். இவர் நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைத்து திறக்கப்பட்டிருந்தது மகேஷூக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்றுபார்த்தார். அப்போது, அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, மகேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

Related Stories:

>