201 பேர் ஆப்சென்ட் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள எழுத்தர், மேற்பார்வையாளர் பணி தேர்வை 317 பேர் எழுதினர்

வேலூர், நவ. 23: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள எழுத்தர், மேற்பார்வையாளர், உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 317 பேர் எழுதினர். 201 பேர் ஆப்சென்ட் ஆகி உள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 105 உதவியாளர்களுக்கான பணியிடங்கள் நேரடியாக நியமனம் மூலம் நிரப்பதற்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்வை 444 பேர் எழுதினர். 334 பேர் ஆப்சென்ட ஆகினர். தொடர்ந்து, 2வது நாளாக இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர்கள், எழுத்தர்கள், மேற்பார்வையாளர்கள் என 59 பணியிடங்களுக்கு 518 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மகளிர் அரசு கலை கல்லூரியிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் டோமினிக் சேவியோ மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் நேற்று நடந்தது. இத்தேர்வை 317 பேர் எழுதினர். 201 பேர் எழுத வரவில்லை. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த தேர்வு மையங்களை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வேலூர் மண்டல இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: