×

இரண்டு நாள் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17,626 பேர் புதிதாக விண்ணப்பித்தனர்

நாமக்கல், நவ.23: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 17,626 பேர் புதிதாக விண்ணப்பம் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில், கடந்த இரு நாட்களாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, பெயரை சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சிறப்பு முகாம் நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டனர்.

அரசியல் கட்சியினரின் வாக்குசாவடி முகவர்களும், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, பட்டியலில் பெயர் சேர்க்க புதிய வாக்கார்களுக்கான விண்ணப்பம் அளித்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்குசாவடி மைய அலுவலர்கள் பெற்றுகொண்டு ஒப்புகை சீட்டு அளித்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில், மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17,626 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதுபோல பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்ய 5,232 பேரும், திருத்தம் செய்ய 3,602, இடமாற்றம் செய்ய 2,091 பேர் என மொத்தம் 28551 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

திமுக முகவர்கள் நேரில் ஆய்வு
ராசிபுரம் அடுத்த  முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு  முகாமை, கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், ஊராட்சி தலைவருமான  அருள், நகர இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் நேரில்  பார்வையிட்டனர். இதேபோல் ராசிபுரம்  நகராட்சியில் நகர செயலாளர் சங்கர்  தலைமையிலும். ஒன்றிய பகுதிகளில் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன்  தலைமையிலும்.  வெண்ணந்தூர் ஒன்றியத்தில் பொறுப்பாளர் துரைசாமி தலைமையில்  பார்வையிட்டனர்.

Tags : camp ,
× RELATED மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்