×

திருச்செங்கோடு அருகே தீயில் கருகிய மாணவி சிகிச்சை பலனின்றி சாவு

திருச்செங்கோடு, நவ.23: திருச்செங்கோடு அருகே, சமையல் செய்த போது தீப்பற்றி காயடைந்த பள்ளி மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருச்செங்கோடு அருகேயுள்ள சின்னமணலியை சேர்ந்தவர் ரம்யா. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் இவரது மகள் அர்ச்சனா பிரியா(14), அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 12ம்தேதி, வீட்டில் சமையல் செய்ய அடுப்பு பற்றவைத்த போது, எதிர்பாராத விதமாக  அவரது ஆடையில் தீப்பற்றிக்கொண்டது. அலறல் சத்தம் கேட்டு வந்த ரம்யா மற்றும் அக்கம்பக்கத்தினர், அர்ச்சனா பிரியாவை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மாணவியை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Student ,death ,Tiruchengode ,
× RELATED 9ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை சாவு