×

ஊடுகல்போடு கிராமத்தில் ₹6.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி

கிருஷ்ணகிரி, நவ.23:வேப்பனஹள்ளி ஒன்றியம் சென்னசந்திரம்  ஊராட்சி, ஊடுகல்போடு கிராமத்தில் ₹6.50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது. இதில், வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் கலந்து கொண்டு  பூமிபூஜை செய்து, சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய  செயலாளர் ரகுநாத், மாதேஸ்வரன், கருணாகரன், சக்கரவர்த்தி, நஞ்சேகவுடு, வினய், நரசிம்மன், சோமு, முனிராஜ், தனம்ஜெயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல்,  சூளகிரி ஒன்றியம், சின்னாரன்தொட்டி தண்ணீர்குட்லப்பள்ளியில், ₹4.50 லட்சம் மதிப்பில் புதிய ரேசன்  கடை கட்டிடத்தை முருகன் எம்எல்ஏ., திறந்து வைத்து பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் நாகேஷ், சீனப்பகவுடு,  ராஜண்ணா, ராமச்சந்திரப்பா, சதாசிவம் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

Tags : village ,Udugalpodu ,
× RELATED அணைக்குடம் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?