×

உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்

தர்மபுரி, நவ.23: திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகை குத்தாலத்தில் நேற்று கைது செய்யப்பட்டதை கண்டித்து, தர்மபுரி 4 ரோட்டில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில் மறியல் நடந்தது. எம்பி டாக்டர் செந்தில்குமார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, சந்திரமோகன், தங்கமணி, தர்மபுரி நகர பொறுப்பாளர் அன்பழகன், முல்லைவேந்தன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரியில் ஒன்றிய திமுக செயலாளர் சேட்டு தலைமையில் மறியல் நடந்தது. இதில், சிட்டி முருகேசன், செல்லதுரை, மகேஷ்குமார் உள்ளிட்ட 40பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், கவுதம் தலைமையில் நடந்த மறியல் நடந்தது. இதில், மலைமான், செந்தில்குமார், செல்வம் உள்பட 10பேர் கைது செய்யப்பட்டனர். நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், இண்டூர் பஸ் ஸ்டாண்டில் ஒன்றிய செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம் தலைமையில் மறியல் நடந்தது. இதில் 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரூர்: அரூர் கச்சேரிமேட்டில் நகர செயலாளர் முல்லை செழியன், சந்திரமோகன், தேசிங்குராஜன் ஆகியோர் தலைமையில் மறியல் நடந்தது. இதில், முன்னாள் எம்எல்ஏ வேடம்மாள், திருமால்செல்வன், பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரம்: பென்னாகரத்தில் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ தலைமையில், சாலை மறியல் நடந்தது.இதில், ஏரியூர் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான செல்வராஜ், நகர செயலாளர் வீரமணி, பொறுப்பு குழு உறுப்பினர் காளியப்பன், பொருளாளர் மடம் முருகேசன், தன்டாளன் உள்பட 86 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : protests ,DMK ,district ,arrest ,Udayanithi Stalin ,
× RELATED யாழ்ப்பாணம் பல்கலை.யில்...