×

தர்மபுரியில் ₹38 லட்சத்திற்கு பட்டு கூடுகள் ஏலம்

தர்மபுரி, நவ.23: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர். கடந்த 15 நாட்களில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், ஒரு விவசாயி மட்டும் அதிகபட்சமாக, 43 கிலோ மஞ்சள் பட்டுக்கூடுகளை, ஒரு குவியலாக கொண்டு வந்திருந்தார். இது, ஒரு கிலோ, ₹208க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ₹8,830 ஆகும். இதேபோல், 168 விவசாயிகள், 320 குவியல்களாக 12 ஆயிரத்து140 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது ₹190 முதல் ₹355 வரையும், சராசரியாக ₹304க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ₹37லட்சத்து 47 ஆயிரத்து, 121 ஆகும். இந்த இரண்டு பட்டுக்கூடுகளின் மொத்த மதிப்பு ₹37 லட்சத்து, 55 ஆயிரத்து, 951 ஆகும்.

Tags : Dharmapuri ,
× RELATED தருமபுரி அருகே எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு.: போலீசார் விசாரணை