×

தர்மபுரி மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டறிய சிறப்பு முகாம்

தர்மபுரி, நவ.23: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கும் விதமாக சிறப்பு முகாம், தர்மபுரி ஆயுதப்படை வளாகத்திலுள்ள காவலர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.முகாமில், தர்மபுரி எஸ்பி பிரவேஸ்குமார் காணாமல் போனவர்கள் பற்றி, கடந்த ஓராண்டில் பதிவாகியுள்ள 102 வழக்குகளின் தொடர்புடைய நபர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்களை நேரில் அழைத்து தகவல்களை சேகரித்தார். அப்போது காணாமல் போனவர்களின் அடையாளங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் புகைப்படம் ஆகியவற்றுடன், அடையாளம் தெரியாமல் இறந்த நபர்களின் புகைப்படங்களும் உறவினர்களுக்கு காண்பிக்கப்பட்டது.பின்னர், காவல் துறை வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த, மாநிலம் தழுவிய காணாமல் போனவர்கள் புகைப்படங்களையும் காண்பித்து தகவல் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தர்மபுரி ஏடிஎஸ்பி குணசேகரன் மற்றும் தர்மபுரி மாவட்ட பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐகள் கலந்து கொண்டனர்.

Tags : camp ,persons ,Dharmapuri district ,
× RELATED கால்நடை முகாம் நடத்த கோரிக்கை