×

முகாமை பார்வையிட்ட கே.என்.நேரு மத்திய மண்டலத்தில் காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் சிறப்பு முகாம்

திருச்சி, நவ.23: தமிழ்நாடு சிறப்பு காவல் துறை இயக்குனர் ராஜேஷ்தாஸ் உத்தரவின்படி, திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம், திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா ஆகியோர் தலைமையில், மாவட்ட எஸ்பி., (பொ) செந்தில்குமார் மேற்பார்வையில், காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் சிசிடிஎன்எஸ் போர்ட்டல் மூலம் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் அங்க மச்ச அடையாளங்களுடன் ஒப்பிட்டு, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள அடையாளம் தெரியாத நபர்களின் புகைப்படங்களை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் காணாமல் போனவர்களின் குடும்ப நபர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை அழைத்து வந்து இறந்தவர்களின் அங்கமச்ச அடையாளங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டது.

இதில் லால்குடி காவல் நிலைய வழக்கில் காணாமல் போன நபரை கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட அடையாளம் தெரியாத பிரேதத்துடன் ஒப்பீடு செய்து கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது போன்று 4 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்த நிலுவையில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி தலைமையாக ஏடிஎஸ்பி மணிகண்டன் மற்றும் மாவட்ட குற்றப்பதிவேடு கூடுதல் டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் மனுதாரர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்ட காவல்துறையினால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியை கண்ட பெற்றோர்கள் காவல்துறையினரை பாராட்டினர்.

Tags : persons ,camp ,KN Nehru Central Zone ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...