தஞ்சையில் காணாமல் போனவர்கள் குறித்து போலீஸ் விசாரணை முகாம்

தஞ்சை.நவ.23: தஞ்சை மாவட்ட காவல் துறை சார்பில் காணாமல் போனவர்களின் அடையாளம் காணுதல் நிகழ்ச்சி, குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு சார்பில் தஞ்சையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஏடிஎஸ்பி ரவீந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். டிஎஸ்பி சீத்தாராமன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வரவேற்றார். இதில், தமிழகம் முழுவதும் காணாமல் போன நபர்களின் விவரங்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்கள் தமிழக காவல்துறையில் உள்ள அந்தந்த மாநகர காவல் ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு அதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதள பக்கம் வெளியிடப் பட்டுள்ளது. இதன் மூலம் காணாமல் போன தங்களது உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களின் விவரங்களை இதில் அறிந்து கொள்ள வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி காணாமல் போனவர்களை தேடுதல் என்ற தலைப்பில் நேற்று தஞ்சை மாவட்ட காவல் துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 5 ஆண்டுகளில் காணாமல் போனவர்களை மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் 65 பேரின் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு, காணாமல் போனவர்களின் விபத்தின் எடுக்கப்பட்ட புகைப்படம் புரொஜெக்டர் மூலம் திரையில் காண்பிக்கப்பட்டது. அதில் உள்ளவர்களை எங்கேயாவது பார்த்திருந்தார்களா? என போலீசார் கேட்டு அறிந்தனர். அப்போது கடந்த ஆண்டு அதிராம்பட்டினத்தை சேர்ந்த சுரேஷ் (26) என்பவர் மாயமாகி திருச்சியில் இறந்தது, 2016 ம் ஆண்டு அம்மாபேட்டையை சேர்ந்த வசந்தா (65) என்பவர் நீடாமங்கலத்தில் இறந்தது குறித்து முதல் கட்டமாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.கூட்டத்தினால், காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்களை பற்றிய விவரங்கள் குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இதில், காணாமல் போனவர்களை பற்றி தெரிந்து கொள்ள வந்த உறவினர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: