×

அறந்தாங்கி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தலாரிகள், 2 பைக் பறிமுதல்

அறந்தாங்கி, நவ.23: அறந்தாங்கி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி, மினிலாரி மற்றும் இரண்டு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சாமிக்கண்ணு, இளமாறன் மற்றும் போலீசார் ஆளப்பிறந்தான் வெள்ளாற்றுப் பாலம் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வெள்ளாற்றில் இருந்து சட்டவிரோதமாக லாரியில் மணல் ஏற்றி வந்த நாயக்கர்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அதேபோல அதே பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த, மினி லாரி மற்றும் 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Aranthangi ,
× RELATED 591 மதுபாட்டில் பறிமுதல்