×

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

நெல்லை, நவ. 23: நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா பதுக்கல் ஆகிய வழக்குகளில் தொடர்புடைய ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை தாலுகா உடையார்குளம் தெற்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (22). இவர் மீது கொலை மற்றும் கொள்ளை ஆகிய வழக்குகள் பாளை தாலுகா காவல் நிலையத்தில் உள்ளது. இவர் ஒரு வழக்கில் பாளை மத்திய சிறையில் உள்ளார். இதுபோல் நாங்குநேரி அருகேயுள்ள தம்புபுரம் பாஸ்கர் தெருவை சேர்ந்தவர் பழனி (59). இவர் மீது நாங்குநேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொள்ளை ஆகிய வழக்குகள் உள்ளன.

இவர் ஒரு வழக்கில் பாளை மத்திய சிறையில் உள்ளார். இதுபோன்று தாழையூத்து அருகேயுள்ள குறிச்சிகுளம் சந்தனமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தங்கபாண்டி மகன் செல்வம் (25), தாழையூத்து ராம்நகரை சேர்ந்த ராமர்பாண்டி மகன் முத்துப்பாண்டி (29) மற்றும் ராஜவல்லிபுரம் வேத கோயில் தெருவை சேர்ந்த அருமைராஜ் மகன் அந்தோணிராஜ் (28). இவர்கள் மூன்று பேர் மீதும் கஞ்சா பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட வழக்குகள் தாழையூத்து காவல் நிலையத்தில் உள்ளது. இவர்கள் மூன்று பேரும் ஒரு வழக்கில் பாளை மத்திய சிறையில் உள்ளனர்.

இதனால் பூல்பாண்டி, பழனி, செல்வம், முத்துப்பாண்டி, அந்தோணிராஜ் ஆகிய 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டி நெல்லை எஸ்பி மணிவண்ணன், இன்ஸ்பெக்டர்கள் பாளை தாலுகா பாலகிருஷ்ணன், நாங்குநேரி சபாபதி, தாழையூத்து பத்மநாபன் ஆகியோர் நெல்லை கலெக்டர் விஷ்ணுவிடம் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று பாளை மத்திய சிறையில் பூல்பாண்டி, பழனி, செல்வம், முத்துப்பாண்டி, அந்தோணிராஜ் ஆகிய ஐந்து பேரை ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்தனர்.

Tags : district ,Nellai ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...