×

டெங்கு கொசு ஒழிப்பு பணி டவுனில் பழைய டயர்கள் அகற்றம்

நெல்லை, நவ.23:  நெல்லை டவுனில் டெங்கு கொசு ஒழிப்பு பணியின் போது பழைய டயர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. இதனால் மழை நீர் தேங்கும் பகுதியில் டெங்கு கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து நெல்லை மாநகர பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாதை தடுக்கும் வகையிலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுகாதார பணிகளை தீவிரப்படுத்தவும் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் பல்வேறு இடங்களில் தேங்கி நின்ற மழை நீரை அகற்றி வருகின்றனர். பாளை எம்ேகபி நகரில் தேங்கி நின்ற தண்ணீரை ஜேசிபி, ராட்சத மோட்டார் மூலம் அகற்றினர். மேலும் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மண்டலத்தில் பல இடங்களில் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று டவுன் பகுதியில் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய டயர்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதையடுத்து மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுரையின் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் முருகேசன் தலைமையில்,

மாநகர சுகாதார அலுவலர் முருகன், பூச்சியியல் வல்லுனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் டவுன் தெற்கு மவுண்ட் ரோடு, நயினார்குளம் சாலை, ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் டயர் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய டயர்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் பழைய டயர்களை அகற்றி டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Tags : town ,
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...