×

ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வாக்காளர் சேர்த்தல் முகாமில் திமுகவினர் ஆய்வு

வேதாரண்யம், நவ.23: வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளில் உள்ள வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தல் முகாம்களை திமுக வழக்கறிஞர் அணி அன்பரசு நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் கர்ணன், ஒன்றிய நகர சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். இதே போல் வேதாரண்யம் திமுக கிழக்கு ஒன்றியத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வாக்காளர் சேர்த்தல் நீக்கல் முகாமில் திமுக கிழக்கு ஒன்றிய தலைவர் சதாசிவம் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரை, ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : consultation meeting ,voter enrollment camp ,DMK ,area ,Vedaranyam ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி