×

திருச்சுழி அருகே கனமழையால் நெல் வயலுக்குள் புகுந்த கண்மாய் நீர்

திருச்சுழி, நவ. 23: திருச்சுழி அருகே கனமழையால் கண்மாய் நீர் நெல்வயலுக்குள் புகுந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். திருச்சுழி அருகே ஆனைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட மூதிரை மொழிந்தான் கிராமத்தில் விவசாய நிலத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஆனைகுளம், சொக்கநாதபுரம் ஊரிலுள்ள கண்மாய் நிறைந்து வருகிறது.

சொக்கநாதபுரத்தில் உள்ள கண்மாயில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து  விவசாய நிலங்களுக்குள் புகுந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் இந்தத் தண்ணீரால் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சுமார் 20 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே,மூதிரை மொழிந்தான் கிராமத்தில் கனமழையால் சேதமடைந்த நெல்பயிருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....