×

உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து காரியாபட்டியில் பஸ் மறியல் போராட்டம்

காரியாபட்டி, நவ. 23: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து காரியாபட்டியில் பஸ்மறியல் போராட்டம் நடைபெற்றது. காரியாபட்டி பஸ்நிலையம் முன்பு திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணக்குமார், துணை அமைப்பாளர்கள் சிதம்பரபாரதி, வெயில்ராஜ்  தலைமையிலும், ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு செல்லம், மேற்கு கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன், பேரூர் செயலாளர் செந்தில், யூனியன் வைஸ் சேர்மன் ராஜேந்திரன் முன்னிலையிலும்  பஸ் மறியல் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சேகர், பேரூர் இளைஞரணி சங்கரேஸ்வரன் உட்பட மறியலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Bus strike ,arrest ,Kariyapatti ,Udayanithi Stalin ,
× RELATED நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி