×

திறந்த நிலையில் கிடக்கும் சாக்கடை வடிகாலால் வாகன ஓட்டிகள் அச்சம்

கரூர், நவ. 23: கரூர் காந்திகிராமம் பிரதான சாலையில் திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகாலால் வாகன ஓட்டிகள் பீதியுடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. கரூர் காந்திகிராமம் வழியாக கரூரில் இருந்து திருச்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாக செல்கிறது. தெரசா கார்னர் பகுதியில் இருந்து காந்திகிராமம் வரை சாலையின் இருபுறமும் சாக்கடை வடிகால்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான சாக்கடை வடிகால்கள் திறந்த நிலையில் உள்ளன.

இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் ஓன்று, திறந்த நிலையில் உள்ள வடிகால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. மேலும் அதிகளவு வாகன போக்குவரத்து காரணமாக பிற வாகன ஓட்டிகள் எளிதில் சாலையை கடக்க முடியாத நிலையில் ஆபத்தான அளவில் சாக்கடை வடிகால்கள் திறந்த நிலையில் உள்ளன. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகால்கள் மீது சிலாப் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : motorists ,
× RELATED குண்டும், குழியுமாக இருப்பதால்...