×

கரூர் பகுதிகளில் சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் விபத்து அபாயம்

கரூர், நவ. 23: விபத்துக்களை விளைவிக்கும் வகையில் சாலையோரங்களில் குப்பைகள் தீயிட்டு கொளுத்துவது தடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. ஆனால் சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அவ்வப்போது தீயிட்டு எரிப்பதால் கடும் சுகாதார சீர்கேடும், வாகன விபத்துக்களும் இதன் காரணமாக நடைபெற்று வருகிறது. கரூர் நகராட்சி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் இதுபோல குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : accident ,areas ,Karur ,
× RELATED சி.டி.எச் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்