ராஜவாய்க்காலில் போலீஸ் பாதுகாப்பு

சின்னாளபட்டி, நவ.23: ஆத்தூர், சித்தயன்கோட்டை ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்லும் பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து வரும் மழைநீர் ஆத்தூர் மற்றும் சித்தயன்கோட்டை நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் செல்கிறது. தற்போது குடகனாறு தண்ணீர் பிரச்சனை சம்மந்தமாக ஆத்தூர் ராஜவாய்க்கால் மற்றும் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் செல்லும் தண்ணீர் பாதையை அடைக்கவோ அல்லது மதகை அடைக்கவோ போராட்டக்காரர்கள் வருவார்கள் என தகவல் வெளியானது. இதையடுத்து செம்பட்டி போலீசார் கன்னிமார் கோவில் அருகேயும்,

குதிரை குளிப்பாட்டி அருகேயும் ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்லும் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கூலையாற்றிலிருந்து வாய்க்கால்களுக்கு மழைநீர் பிரியும் பெரிய கன்னிமார் கோவில் பகுதியில் பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர காமராஜர் அணைக்கட்டு பகுதியில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை என திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: