26ல் பொது வேலை நிறுத்தம் பங்கேற்க தொமுச வலியுறுத்தல்

திருப்பூர், நவ 23: நாடு முழுவதும் வரும் 26ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என தொமுச வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின்(தொமுச)செயலாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மாநில அரசுகளை கண்டித்து 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 10 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இனைந்து வரும் 26ம் தேதி வேலை நிறுத்தப்ப்போராட்டத்தை அறிவித்துள்ளது.

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை நிறுத்துதல், மின்சார சட்ட திருத்த மசோதா 2020ஐ கைவிட வேண்டும், தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், துணை மின் நிலையங்கள்,  மின்  பாதை பராமரிப்பு, துப்புரவு பணி உள்ளிட்டவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விடும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், ஒப்பந்த  தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: