×

ஆலயம் சார்பில் இலவச யோக மையம்

கோவை, நவ.23: கோவை வடவள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீவள்ளியம்மன் மண்டபம் வளாகத்தில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் இலவச யோகா மையம் துவக்க விழா நடந்தது. இதில் ஆலயம் அறக்கட்டளை நிறுவன தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர், இயக்குனர் ஷர்மிளா சந்திரசேகர் கலந்து கொண்டு யோகா மையத்தை துவக்கி வைத்தனர். இந்த யோகா மையத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி தினமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கான சிறப்பு யோகா மற்றும் தியானப் பயிற்சி, பிராணயாமம், கிரியா பயிற்சிகள், கை கால் மூட்டு வலி நீக்கும் வகையிலான சிறப்பு பயிற்சிகள்,

முதியவர்களின் வயோதிக வியாதிகளை குணமாக்கும் வகையிலான பயிற்சிகள், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு கட்டுப்படுத்தும் வகையிலான யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மன உளைச்சல், விரக்தி, எதிர்மறை எண்ணங்களை அகற்றும் வகையிலான தியானம் கற்று தரப்படுகிறது. இந்த பயிற்சி மற்றும் தியானம் மூலமாக மனம் மற்றும் உடல் ரீதியான பலம் பெற முடியும். பல்வேறு பிரச்சினைகளால் துன்பமான மனநிலையில் இருப்பவர்கள் யோகா பயிற்சியின் மூலமாக தன்னம்பிக்கை பெறமுடியும். பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றலைப் பெற முடியும். நீண்டகால அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் மூலமாக தியானம் மற்றும் யோகா பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியின் மூலமாக பொதுமக்கள் புத்துணர்ச்சி பெற முடியும். யோகா பயிற்சி பெற்றவர்களுக்கு உள் மன ஆற்றல் அதிகரிக்கும். எதையும் துணிவுடன் சந்தித்து வாழ்க்கையில் வெற்றி பெற இந்த யோகா பயிற்சி உறுதுணையாக இருக்கும் என ஆலயம் அறக்கட்டளை தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் தெரிவித்தார்.

Tags : Yoga Center ,
× RELATED மிகக்குறைந்த கட்டணத்தில் தஞ்சாவூர்...