×

ஓட்டலில் வாங்கிய உணவில் எலி குட்டி

கோவை, நவ. 23: கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள உணவகத்தில் வாங்கிய உணவில் இறந்த நிலையில் எலி குட்டி இருந்ததால் அதனை சாப்பிட்ட வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். உடுமலை பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவரின் தம்பி கார்த்திகேயன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலையில் கோவை அரசு மருத்துவமனையின் எதிரேயுள்ள ஓட்டலில் தம்பிக்கு ஆப்பம், சாம்பார் வாங்கி வந்துள்ளார். அதனை சாப்பிடும்போது சாம்பாரில் கத்திரிக்காய் இருப்பதாக நினைத்து கார்த்திகேயன், அதை சாப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

பின்னர், அதன் மீது முடிமுடியாக இருந்ததால், சந்தேகமடைந்தவர் அதனை ஊற்று பார்த்துள்ளார். அப்போதுதான் அது கத்திரிக்காய் இல்லை எலி குட்டி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் கடைக்கு சென்று சாம்பாரில் எலி இருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு ஓட்டல்காரர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற உணவுத்துறை அதிகாரிகள் உணவு மாதிரிகளை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : cafe ,
× RELATED ஓட்டலில் திருட்டு