சூதாட்டம்; 4 பேர் கைது

ஈரோடு, நவ. 23: ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் மொசக்கவுண்டனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. வெள்ளிதிருப்பூர் போலீசார் நேற்று அப்பகுதிக்கு விரைந்து சென்று, அங்கு சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வெள்ளிதிருப்பூர் மரவபாளையத்தை சேர்ந்த மணி (45), மாத்தூரை சேர்ந்த பழனியப்பன் (52), விஜயன் (50), பிரகாஷ் (42) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>