உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு

ஈரோடு, நவ. 23: ஈரோட்டில் மத்திய கூட்டுறவு துறையில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு நடந்த எழுத்து தேர்வில் 756 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு துறை மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 73 உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு 1,044 பேர் விண்ணப்பித்திருந்தனர். இப்பதவிக்கான எழுத்து தேர்வு ஈரோட்டில் 3 மையங்களில் நேற்று முன்தினம் நடந்தது. தேர்வில் 468 பேர் ஆப்சென்ட் ஆகி, 576 பேர் மட்டுமே தேர்வினை எழுதினர். இதேபோல், பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக 62 உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 2 மையங்களில் நேற்று நடந்தது.

இத்தேர்வுனை எழுத விண்ணப்பித்திருந்த 779 பேரில், 491 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வினை எழுதினர். இந்த எழுத்து தேர்வு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடித்து சமூக இடைவெளியுடன் நடந்ததாகவும், இந்த இரண்டு நாள் தேர்வுகளிலும் மொத்தம் 756 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>